Your trusted source for fast, factual news.
ArasumalarTRUTH • SPEED • IMPACT
Advertisement 300 × 60
BREAKING NEWS
Uncategorized

2027, சென்னை புத்தகக் கண்காட்சிக்கு பொன்விழா

By admin · August 12, 2026 · 5:36 pm
About-Chennai-Book-Fair-2.jpg (1)
About-Chennai-Book-Fair-2.jpg (1)

2027, சென்னை புத்தகக் கண்காட்சிக்கு பொன்விழா. எனவே வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் 50வது சென்னை புக் ஃபேரை இந்தியப் பிரதமரும், தமிழ்நாட்டு முதல்வரும் தொடங்கி வைக்கிறார்கள். இதற்கடுத்த நாள் தமிழ்நாட்டு எதிர்க் கட்சித் தலைவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். பிறகு வரும் நாட்களில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒவ்வொரு நாளாக பங்கேற்கிறார்கள்.இது உறுதிப்படுத்தப்படாத... ஆனால், உறுதியாகக் கூடியத் தகவல். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளில் பபாசி இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியப் பிரதமர் வருவது இறுதியானால், அதற்கான ப்ரோட்டாக்கால் தொடக்கம் முதலே பின்பற்றப்படும். உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் வந்துவிடும். இது ஸ்டால் டிஸ்பிளேவில் வைக்கப்படும் புத்தகங்களிலும் எதிரொலிக்கும். எனவே பபாசி உறுப்பினர்களாக அல்லாத... ஆனால், ஆண்டுதோறும் ஸ்டால் எடுத்து புத்தக விற்பனையை மேற்கொள்ளும் -மாற்று அரசியலை முன்வைக்கும் -மார்க்சிய லெனினிய, மார்க்சிய, தமிழ்த் தேசிய அமைப்புகள் இந்தப் புறச்சூழலை கவனத்தில் கொள்வது நல்லது. புதிய புத்தகங்களை அச்சிடுவதற்கு முன் கவனமாக எதார்த்தத்தை பரீசிலித்து முதலீடு செய்யுங்கள். முன்புபோல் ஸ்டால் கிடைக்குமா என்று பார்த்துவிட்டு புத்தக வேலைகளில் இறங்குங்கள். இப்போது POD தொழில்நுட்பம் இருப்பதால் இறுதி நேரத்தில் கூட அச்சிடலாம்.பபாசி என்பது இன்றைய சிஸ்டத்துக்கு உட்பட்டு இயங்கும் அமைப்பு. அதைக் குறைக் கூறுவதில் பயனில்லை. ஆளும் தரப்புக்கு ஏற்றபடிதான் அதனால் இயங்க முடியும். ‘தினத்தந்தி’ மாதிரிதான். ஆளுங்கட்சி செய்திகள் முதல் பக்கத்திலும்; எதிர்க் கட்சிச் செய்திகள் 2 - 3ம் பக்கங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் இடம்பெறுவது போல்தான். அனைத்துப் பதிப்பகங்களுக்கும்... அனைத்து புத்தக விற்பனையாளர்களுக்கும் 2027, சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பாக அமைய அட்வான்ஸ் வாழ்த்துகள்.கே. என். சிவராமன்,பத்திரிக்கையாளர்