செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் உள்ள தனியார் உணவகத்தில் கடந்த09.08.2026 அன்று கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் கேளம்பாக்கம் லைன்ஸ் கிளப்பின் 11ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் லைன்ஸ் கிளப்பின் புதியதலைவராக லயன் எம். கந்தசாமி, செயலாளராக லயன்ஏ.ஜெயமுருகன், பொருளாளராக லயன்டி. தணிகாசலம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இதர பதவிக்கானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து இன்று மாலை சுமார் 08.00 நடைபெற்ற நிர்வாகிகளுக்கான அறிமுக நிகழ்ச்சியில் கேளம்பாக்கம் லைன்ஸ் கிளப்பின் இரண்டாம் நிலை தலைவர்LION.APN.D.பிரவீன்குமார் சங்கத்தின் புதிய தலைவர் லயன்எம். கந்தசாமி செயலாளர் லயன்எ.ஜெயமுருகன் பொருளாளர் லயன்.டி. தணிகாசலம் ஆகியோருக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்தார்.


