காதல் திருமணம்: மனமகனை கொன்று ஆற்றில் வீசிய உறவினா்கள்

மாவட்டம் திருவையாறு அருகே இளம் ஜோடி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், பெண் வீட்டாா் மனமகனை கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வெண்ணாற்று கரையில் இன்று அதிகாலை 19 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் வாயில் துணி கட்டிய நிலையில் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தது. இது தொடா்பாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தொிவித்தனா்.

காவல் துறையினா் நடத்திய விசாரணையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணலூர் கிராமத்தை சேர்ந்த பிரசாத் என்பவரை காணவில்லை என நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்று வந்திருந்தது. விசாரணையில் கண்டெடுக்கப்பட்டது காணாமல் போனதாக வழக்குப்பதியப்பட்ட பிரசாந்த் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் மணலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் அருகிலுள்ள இலுப்பூர் கோரையூரைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இதனைத் தொடாந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் குடும்பத்தாருக்கு தெரியாமல் பிரசாந்த் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து பிரசாந்த் அவரது தாய் மலர்க்கொடி மற்றும் அண்ணன், தங்கை ஆகியோர் இளம்பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பிரசாந்தும், இளம்பெண்ணும் ஜெயங்கொண்டம் அருகே ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு அனைவரும் சமயபுரம் அருகே உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். நடந்த சம்பவத்தை தனது தாய்க்கு ஃபோன் செய்து திருமணம் செய்து கொண்டதை இளம்பெண் தெரிவித்துள்ளார். இளம் பெண்ணின் தாயாரும் ஒப்புக் கொள்வதாக சொல்லி இருக்கும் இடத்தின் தகவலை தெரிந்து கொண்டார்.

தகவலை பெற்றுக் கொண்டபின் வீட்டின் குடும்பத்தார் 9 பேர் கொண்ட கும்பல் காரில் சென்று இளம் பெண்ணையும், பிரசாத்தையும் காரில் அழைத்து சென்று இளம்பெண்ணை உறவினர் வீட்டில் விட்டுச் சென்ற அந்த கும்பல், பிரசாந்தை மட்டும் தனியே அழைத்துக்கொண்டு சென்று, பணவெளி சுடுகாடு அருகே கொண்டு சென்றுள்ளார்கள்.

பிரசாந்தின் வாயில் துணியை வைத்து கட்டி கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர். வலியால் துடிதுடித்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இது தொடா்பாக பிரசாந்தின் சகோதரி கூறுகையில், திருமணம் செய்துகொண்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடைபெற்றால் மட்டும் தான் என் அண்ணனின் கொலை குறித்து தொியும். என் குடும்பத்தையும் காணவில்லை என்று தொிவித்துள்ளாா்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் இருவரை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *