பறையர்களின் நிலங்களைப் பறித்தவன் ராசராச சோழன்.
– பா.ரஞ்சித்.
இது சிறிதும் ஆதாரமற்ற கருத்து.
ராசராச சோழனின் மகனான ராசேந்திரசோழன் அந்தனர், கொல்லர், கணக்கர், காவிதி உள்ளிட்ட பல பிரிவினரை உள்ளடக்கி கீழ்த் தஞ்சை பகுதிகள் பலவற்றை இணைத்து மிகப்பெரிய பாசனப் பகுதியுடன் கூடிய குடியிருப்பை ஏற்படுத்தினான். அதை 57 செப்பேடுகளாக எழுதி வைத்தான். அவைதான் “கரந்தைச் செப்பேடுகள்” என்று அழைக்கப்படுகின்றன..
அவ்வாறு உருவாக்கப்பட்ட பகுதியில், நிலங்களை அளந்து மக்களுக்கு ஒப்படைக்கும் போது, அப்பகுதிகளில் ஏற்கனவே உள்ள பறையர் மற்றும் கம்மாளர் ஆகியோரது விவசாய நிலங்களை விட்டுவிட்டு மற்ற நிலங்களையே அளந்து மக்களுக்கு ஒப்படைக்கச் சொல்கிறான்.
அது மட்டுமின்றி, பறையர் மற்றும் கம்மாளர் நிலங்களுக்கு பூரண வரிவிலக்கு அளித்துள்ளான்.ஆனால் பார்ப்பனர்களது நிலங்களுக்கு முதல் மூன்றாண்டுகளுக்கு வரிச் சலுகையும், பிறகு முழுவரியும் கட்டி வர வேண்டும் என்றும் விதித்துள்ளான்.ராசராச சோழனும் இதையே தான் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளான்.
உண்மை இவ்வாறிருக்க பா.ரஞ்சித் இவ்வாறு பொய்யுரைக்க அவசியம் என்ன….
மேற்கண்ட கரந்தைச் செப்பேடுகள் கூறுவது படி கி.பி.11 ஆம் நூற்றாண்டில் பறையர்கள் விவசாயிகளாகவும், அரசிடம் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களாகவும் சமூகப் படிநிலையில் மிக உயர்வான இடத்திலும் இருந்துள்ளனர் என்று தெரிகிறது…
ஆனால், இந்த திராவிட மற்றும் தலித்திய வாதிகள் தாங்கள் எப்போதுமே தீண்டத்தகாதவர்களாகத் தான் இருந்துள்ளோம் என்று அழுகாச்சி காவியம் பாடி பறையர் மக்களை கடும் தாழ்வு மனப்பான்மையில் தள்ளி வருகின்றனர்…
-பாண்டியராசன் வழக்கறிஞர் சட்டத்தரணி.