ஈரோடு: காவிரி ஆறு மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் இடையே, அரசு சார்பில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, சூரியம்பாளையம் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில், கலெக்டர் கதிரவனிடம் மனு வழங்கினர்.சங்க செயலாளர் கேசவன் மற்றும் நிர்வாகிகள் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 720 கோடி ரூபாய் மதிப்பில் ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சிறிய சாய, சலவை மற்றும் தோல் ஆலைகளுக்கான பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 2014ல் அறிவிப்பு செய்தார். அந்தந்த பகுதி சாய, சலவை, தோல் ஆலை கழிவு நீரை, மொத்தமாக சேகரித்து ஒரே இடத்தில் சுத்திகரிப்பு செய்யும் நோக்கத்தில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக ஈரோடு, சர்கார் பெரிய அக்ரஹாரம் பகுதியில், காவிரி ஆறு மற்றும் காளிங்கராயன் வாய்க்காலுக்கு இடைப்பட்ட விவசாய நிலம், 22 ஏக்கர் தேர்வு செய்தனர். அரசாணைப்படி, நீர் நிலை மாசுபடுத்தும் ஆலைகளை, ஆற்று பகுதியில் இருந்து, ஒரு கி.மீ., முதல், 5 கி.மீ., வரை இயங்கவோ, உரிமம் வழங்கவோ கூடாதென விதி உள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டால், நீர் நிலைகளில் கழிவு நீர் கலக்கும் வாய்ப்பு ஏற்படும். இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோதே, அப்போதைய கலெக்டர் பிரபாகர், சுற்றுச்சூழல் அமைச்சர் வெங்கடாசலம் மற்றும் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பப்பட்டது. அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், திட்டத்தை நிறைவேற்றும் முயற்சி கைவிடப்பட்டது. தற்போது, மீண்டும் அதே இடத்தில் திட்டத்தை செயல்படுத்த, மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிந்தோம். இது, அரசாணைக்கு விரோதமானது. காவிரி நீரை, குடிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு, அவ்விடத்தில் அமைக்க அனுமதிக்கக