கோபி: சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட, கோபி கோட்ட பயனாளிகளுக்கு, ஆர்.டி.ஓ., அசோகன், நிவாரண நிதி வழங்கினார். சாலை விபத்தில், காயம் மற்றும் உயிர்பலி ஏற்பட்டால், தமிழக முதல்வரின், சாலை விபத்து நிவாரண நிதி வழங்கப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய், உயிர்பலி ஏற்பட்டால், ஒரு லட்சம் ரூபாய், சம்பந்தப்பட்டவரின் வாரிசுகளுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி, கோபி கோட்ட பயனாளிகளுக்கு, கோபி ஆர்.டி.ஓ., ஆபீசில், நேற்று நிவாரண நிதி வழங்கப்பட்டது. கடந்த, 2015 முதல், 2017 வரை, விபத்தில் காயமடைந்த மற்றும் பலியான, 50 பயனாளிகளுக்கு, 36.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆர்.டி.ஓ., அசோகன் வழங்கினார். பயனாளிகள் வாரியாக அழைத்து, குடும்ப விபரங்களை கேட்டு, வழங்கினார். நிவாரண தொகையை, பயனுள்ள வகையில், குடும்ப வளர்ச்சிக்கு பயன்படுத்த அறிவுரை கூறினார்.