கமுதி அருகே மரக்குளத்தில் ரோட்டோரத்தில் தெருவை ஆக்கிரமித்து, தனியார் ஒருவர் தண்ணீர் தொட்டி அமைத்துள்ளார். யாரும் அமர்ந்தால் தண்ணீர் தொட்டி இடிந்து விழும் என்பதால்,தண்ணீர் தொட்டியில் அமர்ந்தால் மரணம் நிச்சயம் என, பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்களை அச்சுறுத்தும்வகையில் வாசகம் எழுதி வைத்திருந்தார். தெருவை ஆக்கிரமித்ததோடு, வன்முறை வாசகத்தால், கிராம மக்கள் அச்சமடைந்ததுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. எஸ்.பி., ஓம்பிகாஷ்மீனா உத்தரவின்பேரில், தண்ணீர் தொட்டியில் எழுதப்பட்டிருந்த வன்முறை வாசகம், கமுதி போலீசாரால் அழிக்கப்பட்டது. இதனால் மரக்குளம் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.