ராமநாதபுரம்:மனுவில் கூறியிருப்பதாவது:மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரிய உறுப்பினர்களாக 144 பேர் உள்ளனர். பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்காமல் யாருக்கும் தெரியாமல் 2015ல் ரகசியமாக அறக்கட்டளை ஒன்றை துவக்கி உள்ளனர். அறக்கட்டளை என்பதை இன்றுவரை எந்த இடத்திலும் அவர்கள் அடையாளம் காட்டவில்லை. 2019ல் சங்கத்தின் தலைவராக இருந்தவர் மஞ்சள் நோட்டிஸ் வழங்கிவிட்டு தலைமறைவான பிறகே அறக்கட்டளை விவரம் எங்களுக்கு தெரியவந்தது. இன்று வரை சங்க சொத்துக்கள் அனைத்தும் சங்கத்தின் பெயரிலேயே இருந்து வருகிறது.ஆனால் அறக்கட்டளை நிர்வாகிகள் சங்க பள்ளி, மற்றும் இதர வருவாய்களை மோசடியாக கையாடல் செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. 144 உறுப்பினர்களின் கையொப்பத்தையும் அவர்களாகவே போட்டு அவர்களுக்கு சாதகமான நிலையை உருவாக்க பார்த்துள்ளனர். சங்க வருவாயை கைப்பற்றும் நோக்கில் மறைந்த உறுப்பினர்களின் கையெழுத்தையும் போட்டுள்ளார்கள். இது தொடர்பாக தாசில்தார் தலைமையில் ஜூன் 8ல் பொதுக்குழுவை கூட்டி சமாதானக்கூட்டம் நடத்தினார்கள்.அதில் சங்கம் வேண்டும் என 102 குடியிருப்பு உரிமையாளர்களும், அறக்கட்டளை வேண்டும் என 13 பேரும் தாசில்தார் முன் கையொப்பம் இட்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். சங்கம் தான் வேண்டும் என தாசில்தார் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர். பொதுக்குழு கூடி தேர்வு செய்த பொறுப்பாளர்களிடம் அறக்கட்டளை நிர்வாகிகள் கணக்குகளை ஒப்படைக்க ஆவண செய்யவும், தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறப்பட்டிருந்தது.