பரமக்குடி வேதாந்தமடத்தெருவில் கடந்த வாரம் கைத்தறிநெசவாளார்மாதவன் வீடு இடிந்தது. அப்போது மனைவி உட்படகுழந்தைகள் அனைவரும் திருமண வீட்டிற்கு சென்றதால்உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ளதறி,நெசவு தளவாட சாமான்கள் உட்பட, அத்தியாவசிய பொருட்கள் சேதமடைந்தன.இவர்களை சந்தித்த பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகர், அ.தி.மு.க.,மாவட்ட செயலாளர் முனியசாமி, மகளிரணி இணை செயலாளர்கீர்த்திகா, இளைஞரணி செயலாளர் வின்சென்ட், ஜெ., பேரவைசெயலாளர் வடமலையான் உள்ளிட்டோர் அவரது வீட்டிற்குசென்று ஆறுதல் கூறி 5,000 ரூபாய்நிதிஉதவி அளித்தனர்.