கடலாடி:-சிக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்காததை கண்டித்தும், கோரிக்கையை வலியுறுத்திய கிராம மக்கள், அதிகாரிகள் பங்கேற்ற சமாதானக் கூட்டம் கடலாடி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் பரமசிவம் தலைமை வகித்தார்.கடலாடி பி.டி.ஓ., (கி.ஊ)மேகலா முன்னிலை வகித்தார். காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட செயற்பொறியாளர் சண்முகநாதன்,திட்டப்பொறியாளர் வடிவேல்,சிக்கல் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் ஆகியோருடன்ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி, சி.ஐ.டி.யூ., உப்பு நிறுவன தொழிற்சங்க தலைவர்பச்சமால் உட்பட மார்க்சிஸ்ட் கட்சியினர்ஏராளமானோர் பங்கேற்றனர்.தீர்மானங்கள்: காவிரிகுடிநீர் வரும் நிலையில் வாரம் இருமுறை சிக்கல் பகுதிக்கு குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கப்படும்.சிக்கல் பகுதியில் (ஆர்.ஓ., பிளாண்ட்) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்ட பணி ஜூன் 30க்குள் முடிக்கப்படும்.காவிரிகுடிநீர் செல்லாத கிராமங்களுக்கு உறைகிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்படும்.காவிரி பிரதானக்குழாய்களை சேதப்படுத்தும் விஷமிகள் கண்டறியப்பட்டால், போலீசார் மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பேசி தீர்வு காணப்பட்டது.