ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி ராவண சம்ஹாரம் நடந்தது.ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் தல வரலாறு குறித்து பக்தருக்கு விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடப்படுகிறது. இலங்கை மன்னன் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு ஸ்ரீராமர் ராமேஸ்வரமை வருகிறார். இதனை நினைவு கூறும் விதமாக நேற்று ராமேஸ்வரம் திருக்கோயிலில் இருந்து தங்க கேடயத்தில் ஸ்ரீராமர், சீதை, லெட்சுமணர், அனுமானுடன் புறப்பட்டு திட்டகுடியில் எழுந்தருளினர்.பின் கோயில் குருக்கள் மூலம் அங்கிருந்த ராவணனை ராமர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின் ஸ்ரீராமருக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் கல்யாணி, கோயில் கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வம், கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.