ராமநாதபுரம்:மனுவில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளை நம்பி 100க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஒன்றரை லட்சம் மீனவர்கள் மீன் பிடித்தல், பாசி சேகரித்தல் உள்ளிட்ட தொழில்களை பராம்பரியமாக செய்துவருகின்றனர். தற்போது வனத்துறை மீனவ மக்களிடம் எந்த முன்னறிவிப்பும் இன்றி தீவுப்பகுதிகளை சுற்றுலா தலமாக்க தீவுகளை சுற்றிலும் மிதவைகளை போட்டுள்ளனர்.இதனால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் மீனவர்கள் வாழ்வாதாரம் அழியும் நிலை ஏற்பட்டுஉள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது. கலெக்டர் வீரராகவ ராவ் ஆர்.டி.ஓ., தலைமையில் மீன்வளத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.