குடிநீர் வசதி வேண்டும் விருதுநகர் சத்திரரெட்டியபட்டி காமராஜர் காலனியில் குடிநீர் வசதியில்லை. குடிநீருக்காக 2 கி.மீ., துாரம் செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியில் முதியோர்கள் அதிகம் வசிக்கின்றனர். மிகவும் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கண்ணன், சத்திரரெட்டியபட்டி.நாய் தொல்லை அதிகம்விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி முத்தால் நகரில் நாய்த் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் முதியவர்கள் வெளியில் நடமாட முடிவதில்லை. தெருநாய் கடித்து இதுவரை 5 பேர் வரை இறந்துள்ளனர். நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோ.புஷ்பராஜ், முத்தால்நகர்.உறிஞ்சப்படும் குடிநீர்அருப்புகோட்டை காந்தி நகர் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள குடிநீர் பொதுக்குழாய்களில் இருந்து சிலர் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி கொள்கின்றனர் .அதனால் மற்றவர்கள் குழாய்களில் தண்ணீர் பிடிக்க முடிவதில்லை. எனவே அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜேஷ்குமார், காந்தி நகர்.நிலத்தடி நீர்மட்டம் குறையுதுவிருதுநகர் கவுசிகா ஆற்றில் சீமைகருவேல மரங்களும், ஆகாயத்தாமரை மற்றும் புதர்செடிகளும் வளர துவங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாகுறை ஏற்படுகிறது. கருவேலம் மரங்களை வேரோடு அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வேலம்மாள் , விருதுநகர்.டூ வீலரால் தொல்லைஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடக்குமாத வீதி சாலையில் இருசக்கர வாகனங்களின் நிறுத்தி வைக்கின்றனர். கடைக்காரர்கள் கடைப்பொருட்களை சாலையில் பரப்பி வியாபாரம் செய்கின்றனர். இதனால் கோயில் யானை உட்பட அனைவரும் சென்று வர சிரமமாக உள்ளது. -ஈஸ்வரமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார்.குப்பைத்தொட்டியா