சிவகாசி:வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நெல், கம்பு, உளுந்து, பாசிப்பயறு, மற்றும் சூரியகாந்தி விதைகளை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பத்மாவதி தெரிவித்தார்.அவரது செய்திக்குறிப்பு: 2019 – 20 நிதியாண்டில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு ஏதுவாக நெல் – டி.கே.எம்-13 சான்று விதை , கம்பு தனசக்தி, உளுந்து வம்பன்- 6 ஆதாரம் 2, பாசிப்பயறு கோ-8 ஆதாராம் 2, சூரியகாந்தி டி.ஆர்.எப் -113 ஆதாரம் 2 விதைகளும் அத்துடன் அனைத்து திரவ உயிர் உரங்களும், நெல் நுண்ணுரம், சிறு தானிய நுண்ணுரம், பயறு நுண்ணுரம், பருத்தி நுண்ணுரம், சூடோமோனஸ் உரங்களும்இருப்பில் உள்ளது. விவசாயிகள் அனைவரும் விதைப்பு நேரத்தில் சான்று விதைகள் மற்றும் நுண்ணுரங்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுள்ளார்.