நரிக்குடி பனையூரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். விவசாயத்தை பயன்படுத்தி இலவச மின்சார இணைப்பு பெற்றார். இதை பயன்படுத்தி டிராக்டர்களில் குடிநீர் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. விருதுநகர் உதவி பொறியாளர் சுடலைமுத்து ஆய்வு செய்தார். மின்சாரத்தை திருடி குடிநீரை விற்று வந்தது தெரிந்தது. அபராதம் விதிக்க போவதாக தெரிவித்த உதவி பொறியாளரை அடையாளம் தெரிந்த, தெரியாத மூன்று பேர் தாக்கினர். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.