சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா
கோவை. ஏப்ரல்.19-
கோவை ராமநாதபுரம் சுங்கம் சிந்தாமணி பின்புறம் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா நடைபெற்றது.
15 .4.19 அன்று கணபதி ஹோமத்துடன் பூச்சாட்டு விழா, திருவிளக்கு பூஜை, கொடியேற்றத்துடன் விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் முத்து பல்லாக்கு ஊர்வலம் நடைபெற்றது. பின்பு வரசித்தி விநாயகர் திருக்கோவில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்தனர் பிறகு 19.4 .2019 அன்று ஒலம்பஸ் அங்காளம்மன்- பிளேக் மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கும்பம் அழைத்து வரப்பட்டது. விழாவிற்கு கோவில் கமிட்டி தலைவர் விஜயகுமார், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ரமேஷ் குமார், துணை தலைவர் சண்முகசுந்தரம், துணைச் செயலாளர் உதயகுமார், துணைப் பொருளாளர் திரு மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.