ராகுல், பிரியங்காவை சந்தித்த சித்து….
புதுடில்லி : பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்குடன் தொடர் மோதலில் ஈடுபட்டுள்ள அம்மாநில அமைச்சர் சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் பிரியங்காவை புதுடில்லியில் இன்று(ஜூன் 10) சந்தித்தார்..
பஞ்சாப்பில் அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கிற்கும் அமைச்சர் சித்துவிற்கும் இடையே, கட்சி விவகாரம் தொடர்பாக மோதல் நிலவிவருகிறது. இதனை தொடர்ந்து சித்து வகித்து வந்த சுற்றுலா மற்றும் கலாசார துறை பொறுப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மின்சாரத்துறை வழங்கப்பட்டது. ஏற்கனவே, சித்துவின் மனைவிக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்ற பிரச்னையும் எழுந்தது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை சித்து டில்லியில் சந்தித்துள்ளார். சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள சித்து, ராகுலிடம் கடிதம் ஒன்றை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பிரச்னை குறித்தோ பேச்சுவார்த்தை குறித்தோ அதில் தகவல் ஏதுமில்லை.
எனினும், பஞ்சாப் அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.