தமிழகத்தில் விரைவில் மின்சார பேருந்து…..
சென்னை : தமிழகத்தில் விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்குவதற்கு நடைவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் பள்ளிப்பேருந்துகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழகத்தில் விரைவில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் இயக்கப்படும்.
தனியார் பள்ளி பேருந்துகளில் வருடாந்திர கட்டணத்தை முறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தால் அதனை அரசு பரிசீலிக்கும் ” என்றும் அவர் தெரிவித்தார்.