குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு சீட் கொடுக்கப்பட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்….
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்வி பிரக்யா தாகூர் பா.ஜனதா சார்பில் போபால் தொகுதியில் போடியிட்டு வெற்றிப்பெற்றார். சாத்வி பிரக்யாவை பா.ஜனதா களமிறக்கியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இவ்விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் தேசிய புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் சாத்வி பிரக்யா ஆஜர் ஆனார். இப்போது சாத்வி பிரக்யா மற்றும் பா.ஜனதாவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் பவார் விமர்சனம் செய்துள்ளார்.
அவர் பேசுகையில், மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிக்கு சீட் கொடுக்கப்பட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சாடியுள்ளார்.