ஜூலை மாதம் தொடங்க இருக்கிறது, புதிய சுகாதார திட்டம். – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழ்நாடு அரசு உலக வங்கியின் நிதி உதவியுடன் 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 1,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் மூலமாக அரசு மருத்துவமனைகளில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன், தொற்றுநோய் தடுப்பு கண்டறிதல் மற்றும் சிகிச்சை, பேறு கால அவசர சிகிச்சை, சுகாதார தகவல் மேலாண்மை உள்ளிட்ட வைகளை செயல்படுத்தி வந்துள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு 2019ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 2857.003 கோடி ரூபாய் மதிப்பில் உலக வங்கியின் நிதியுதவியுடன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் கூறினார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர். தொடர்ந்து பேசிய அவர், இந்த திட்டத்திற்கான உலக வங்கியின் பங்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,000 கோடி ரூபாய் என்றும், தமிழ்நாடு அரசு 857.1 கோடி கூடுதலாக முதலீடு செய்ய உள்ளது என்றும் கூறினார்.
இந்த திட்டத்தினை செயல்படுத்த வேண்டிய நிதியினை கொடுக்க, மார்ச் மாதம் 19ம் தேதி அன்று உலக வங்கி ஒப்புதல் வழங்கியது என்றும், ‘நிலையான வளர்ச்சி’ என்ற குறிக்கோளுடன் ஐந்து வருடங்களுக்கு 5.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் கூறினார்.
தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ நிலையங்களில், உயர்தர மருத்துவ சேவைகளை வழங்க முடியும் என்றும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, நோயின் தன்மையை கட்டுப்படுத்துவதற்கும், தொற்றா நோய்களை தடுப்பதற்கான செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதற்கான உரிய மேல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், அரசு மருத்துவமனைகளில் உள்ள விபத்து காயம் சிகிச்சை மையங்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் என்றும், இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். மேலும் ஜூலை மாதம் முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறையின் தேவைக்கு ஏற்றார்போல் நிதி விடுவிக்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில், 10 சதவீத பொது பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்து, தமிழக அரசு இதுவரை முடிவு செய்யவில்லை.