நில உரிமையாளர்களை சமாதானப்படுத்தி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் சேலம் மாநகரின் மையப்பகுதியில் 7.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 447 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது தற்போது இப் பாலத்தின் ஒரு பகுதி ஏற்காடு சாலையிலிருந்து ராமகிருஷ்ணன் சந்திப்பு வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இப்பாலம் தமிழகத்தில் முதல்முறையாக நவீன தொழில்நுட்பத்தில் தூண்களுக்கு இடையே மேல்தளம் பொருத்தப்பட்டு மேம்பாலத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன சேலம் மாநகரில் நிலவிவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2016ம் ஆண்டு 320 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டது இந்த மதிப்பீடு 441 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு தற்போது ராமகிருஷ்ணன் சந்திப்பு முதல் ஏ வி ஆர் ரவுண்டானா வரை மேம்பால பணிகள் முடிக்கப்பட்டுள்ளன பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்ததன் மூலம் சுமார் 7 லட்சம் பேர் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஈரோடு கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வளம் நிறைந்தது என்றும் இப்பகுதிகளில் கனரக வாகனங்கள் தடையின்றி செல்ல உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கூறினார் தமிழகத்தில் தற்போதுள்ள நெடுஞ்சாலைகள் கடந்த 2001ம் ஆண்டு அமைக்கப்பட்டதாக குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முன்பு இருந்ததை விட தற்போது 300 மடங்கு போக்குவரத்து அதிகரித்திருப்பதாகவும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து தொழில் வளத்தை பெருக்க வேண்டும் என்பதற்காகவே புதிய சாலைகள் அமைக்கும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார் 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பேசிய முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கும் நில உரிமையாளர்களை சமாதானப்படுத்தி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசின் 8 வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார் மாநில அரசைப் பொருத்தவரை எந்த ஒரு திட்டத்தையும் யாரிடத்திலும் திணிக்க வேண்டும் நிலத்தைப் பறிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார் சேலம் மாவட்டத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்திருந்ததாக கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் ராணுவ தளவாட உதிரிபாக தொழிற்சாலை அமைக்கப்படும் போது நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார்.
சேலம் மாநகரத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் பாஸ்போர்ட் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் பாஸ்போர்ட் அமைக்கும் பணி தொடங்கப்படும் என குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சேலம் செங்கப்பள்ளி சாலையை விரிவுபடுத்த மத்திய அரசு அனுமதி அளிப்பதாக கூறினார்
இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் விழா நடந்து கொண்டிருக்கும் போது அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் அவரவர் அவர்களை வாழ்த்தி கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது விழா முடிந்த பின்பு மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுக எம்பி மட்டும் எம்எல்ஏவாக சுமார் 10 நிமிடம் காத்திருந்து பின்னர் திறந்து வைத்தார் விழாவிற்கு பின்னர் செய்தியாளர்கள் தேசிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் விழா குறித்து முறையான அழைப்பு ஏதும் வரவில்லை என்றும் முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் கலந்துகொண்டு தொகுதிக்கான கோரிக்கை குறித்து பேச நினைத்து இருந்த நிலையில் யாரையும் பேச அனுமதிக்காதது வருத்தமளிப்பதாகவும் கூறினார்