உலகமெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்! தமிழகத்திற்குள் நுளையவிடாமல், அடித்து விரட்டும் மக்கள் நாயகன் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

உலக மக்களை அச்சுறுத்தி மக்களின் உயிரை குடித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தினம் தினம் அதிகரித்துக் கொண்டே உள்ள சூழ்நிலையில் தமிழக மக்களை கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீட்க தமிழக அரசு பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து கையாண்டு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை மீட்க ஒவ்வொரு நிமிடமும் காலம் தாழ்த்தாமல் பம்பரமாய் சுழன்று செயல்பட்டு வருகிறது தமிழக அரசு.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நாயகன் என்றழைக்கப்படும் தமிழக மக்கள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது சுகாதாரத்துறையில் மிக மிக செம்மையாக கவனம் செலுத்து கொரோனா வைரஸ் மக்களிடத்தில் சென்றடையாதவாறு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தூக்கமின்றி ஆய்வு செய்து மருத்துவர்களிடம் பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து கூறி தனது துறையின் கீழ் செயலாற்றி வரும் அரசு அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு வினாடி பொழுதும் செயலாற்றி வருகின்றார் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

இன்று 05/04/2020 ஞாயிற்றுகிழமை புதுக்கோட்டை நகர் முழுவதும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பா.உமா மகேஸ்வரி அவர்களின் ஏற்பாட்டில், நகராட்சி ஆணையர் (பொருப்பு) திரு. ஜீவ சுப்பிரமணியன் அவர்களின் கண்காணிப்பில், நகர் நல அலுவலர் டாக்டர்.யாழினி அவர்களின் செயல்பாட்டில் மக்கள் நலப்பணியாள்கள் மூலம் சுமார் 502ர்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூலம், கையால் இயக்கு கூடிய ஸ்பிரேயர், பெட்ரோல் மூலமாக இயங்க கூடிய ஸ்பிரேயர், வாகனத்தில் தற்காலிகமாக வைத்து இயக்க கூடிய ஜென்ட்ரேட்டர்ஸ் ஸ்பிரேயர், ஜெட் ஸ்பிரேயர் மற்றும் தீயணைப்பு துறையில் உள்ள தீயணைப்பபு வாகனங்களில் கிருமி நாசினிகள் கரைக்கப்பட்டு வீடுகள், வாகனங்கள் சாலைகள், பொது இடங்கள் மற்றும் மாடி குடியிறுப்புகள் என நகர் முழுவதும் சுமார் 150 ற்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா வைரஸ் புதுக்கோட்டை நகருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படாதவாறு அதிரடியாக செயல்பட்டு வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் தீயணைப்புத்துறை மூலம் தீயணைப்புத்துறை வீரர்கள் பிரமாண்ட தீயணைப்பு வாகனம் மூலம் ஐந்தடுக்கு, ஆறடுக்கு வணிக விற்பனை கட்டிடங்களுக்கு கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை காவல்துறை ஒரு பக்கம் மக்களை அருகருகே நிற்காத வாரும் முழு பாதுகாப்போடு மாஸ்க் மற்றும் அரசு விதித்துள்ள விதிகளின் படி செயல்படுமாறு மக்களை அறிவுருத்தி வருகின்றனர் மற்றும் உங்கள் நலனுக்காக 144 தடை உத்தரவை மதித்து வரும் 14ம் தேதி வரை வீட்டிற்குள்ளே இருங்கள் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

தன் வகிக்கும் சுகாதாரத் துறையில் தமிழகத்தில் எவ்வித சஞ்சலமும் நடந்து விடாதவாறு மக்களை காப்பாற்றுவதில் தனது இமைக்குள் வைத்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறார் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.