படேல் சிலை தேவையா?

என்று விமர்சிக்கும் போதெல்லாம் உடனே தாஜ்மகால் தேவையா?

என்று சம்பந்தமே இல்லாமல் எதிர்க் கேள்வி கேட்கின்றனர்.

படேல் சிலைக்கும் தாஜ்மகாலுக்கும் என்ன சம்பந்தம் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

அந்த தாஜ்மகால் இன்றைக்கு சுற்றுலாத் தளமாக, உலக அதிசயமாக இருக்கலாம்.

ஆனால் அந்த தாஜ்மகால்தான் அதனைக் கட்டிய ஷாஜகானுக்கு வாழ்நாள் சிறையைப் பெற்றுத் தந்தது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?*

ஆம்..!

எதற்கெடுத்தாலும் ஆடம்பரம் கேளிக்கை என்று மக்களின் வரிப்பணத்தை வீனாக்கிய தந்தையை வெறுத்த அவுரங்கசீப், அதிரடியாக ஷாஜஹானைக் கைது செய்ததோடு, நீ நாடாண்டு கிழிச்சதெல்லாம் போதும் என்று கூறி, தாஜ்மகால் கட்டப்பட்ட யமுனை ஆற்றின் எதிர்க்கரையில் அந்த தாஜ்மகாலையேப் பார்த்துக் கொண்டு கிட என்று சிறை வைத்தார்.

அந்த சிறையை விட்டு வெளியில் வரும்போது ஷாஜகான் சடலமாகத்தான் வெளிவந்தார்.

தனக்கு உடன் பாடில்லை என்ற போதிலும் தந்தையின் விருப்பப்படி அவரது உடலை தாஜ்மகாலுக்குள் அடக்கம் செய்தார்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்தியாவை ஆண்ட முகலாயர்களிலேயே எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர் அவுரங்கசீப் மட்டுமே!

தன் கையால் தொப்பித் தைத்து அந்த வருமானத்தில்தான் அவர் உணவுண்டார்.

அப்படிப்பட்ட எளிய, மக்களின் வரிப்பணத்தில் உணவுண்ணவே கூடாதென்ற அந்த சுயமரியாதைக் காரரான அவுங்கசீப்பிற்கு மக்களின் வரிப்பணத்தில் ஷாஜஹான் கட்டிய தாஜ்மகாலை எப்படி ரசிக்க முடியும்?

இன்று வரை அவுரங்கசீப் புதைக்கப்பட்ட இடம் ராஜராஜசோழனின் சமாதியைவிட படுமோசமாக புல் முளைத்துக் கிடக்கிறது.

ஏனென்றால் எனக்கு சமாதி எழுப்பக் கூடாதென்பதை அவர் வாய் மொழி உத்திரவாகவே கூறிச் சென்றார் என்றும் வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் ஒரு விசித்திரம் என்ன தெரியுமா?

வரலாற்றாய்வாளர்கள் எல்லோருமே அவுரங்கசீப்பை ஆச்சரியமிக்க கண்ணியமிக்க சிறந்த ஆட்சியாளர் என்கின்றனர். ஆனால் செவி வழியாகப் பேசுபவர்கள் அவரைக் கொடுங்கோலன் என்று பேசுகிறார்கள். அப்படி பேசுபவர்களால் ஒரு ஆதாரத்தை கூட எடுத்து வைக்க முடியவில்லை.

அவர் உருவ வழிபாடுகளை வெறுத்தாரேயன்றி எதிர்க்கவில்லை.

*ஒரு முறை அவர் நகர்வலம் வந்த போது எனது ராமர் சிலையைக் காணவில்லை என்று ஒரு பிராமணர் புகாரளிக்க, அங்கேயே கூடாரமடித்துத் தங்கிய அவுரங்கசீப் அந்த ராமர் சிலையை கண்டுபிடித்துத் தந்த பின்தான் நகர்வேன் என்று கூறியதோடு வீரர்கள் அதனைக் கண்டு பிடித்துக் கொடுத்த பின்தான் கூடாரத்தையே கலைத்தாராம் அந்த பாதுஷா.*

*-by ஜணமே ஜெயன்*

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107