பெல்ஜியத்தில் ஒரு பெண்மணியின் மூலம் அவரின் பூனைக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அந்த பூனை வாந்தி, பேதி மற்றும் மூச்சு திணறலால் அவதியுற்று வந்ததாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்மணிக்கு ஒரு வாரகாலமாக கொரோனா தொற்று இருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பூனை உயிருடன் இருக்கிறதா என்பது குறித்து தகவல் இல்லை. உலகம் முழுதும் மனிதனிடமிருந்து விலங்குகளுக்கு தொற்று ஏற்படுவதாக முந்தைய நிகழ்வுகள் இல்லை என்றாலும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ சாத்தியமில்லை என்றே சொல்லப்படுகிறது. அதனால் செல்ல பிராணிகளை விட்டு அகல வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவைகளை கொஞ்சும் போது கைகளை கழுவி கொள்வது அவசியம். மேலும், மூக்கை பிராணிகளின் உடலில் உரசுவது, தேய்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது பிராணிகளுக்கு நம்மிடமிருந்து தொற்று பரவாமல் தடுக்கும். செல்ல பிராணிகளுக்கு நம்மால் எதுவும் ஆகி விட கூடாது என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி.

நாராயணன் திருப்பதி.

ஆதாரம் : (The Brussels Times)

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *