கொரோன வைரஸ் நோய் தொற்றால் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய தனது 15 நாள் ஊதியமான 23 ஆயிரத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கிய தலைமைக் காவலர் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
கொரோன வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் , நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தமிழக அரசிற்கு அனைத்து தரப்பட்ட மக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி உதவிட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டிருந்தார் .
இந்தநிலையில் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றும் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கீர்த்தி சபரிநாதன் என்பவர் தனது ஒரு மாத ஊதியமான 46 ஆயிரம் ரூபாயில் 15 நாள் ஊதியமான 23 ஆயிரத்தை பிடித்தம் செய்து கொரோன வைரஸ் தொற்றால் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் கடிதம் கொடுத்துள்ளார்.