வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு அன்பான வேண்டுகோள் !!!
அன்பார்ந்த பெரியோர்களே சகோதரர்களே நாடு முழுவதும் கொரானா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல்வேறு நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகிறார்கள் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பல மாநிலங்கள் முடக்கப்பட்டு வருகிறது லட்சோப லட்சம் மக்களுக்கு இந்த நோய் பரவி வருகிறது நாடு முழுவதும்
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் மரணமடைந்து விட்டார்கள் 500க்கும் மேற்பட்ட நபர்கள் மீது இந்த கொரானா வைரஸ் தாக்கியுள்ளது
இதனால் நாட்டு மக்கள் மிகவும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள் பல்வேறு மாநில அரசுகள் ஒரு சில உதவிகளை செய்து வருகிறது ரேஷன் கடையில் அனைத்து பொருட்களும் இலவசமாக பெரிய கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் நடைபாதை வியாபாரிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் உதவிகள் செய்தாலும் அவர்களுக்கு அது பற்றாக்குறையாக அமைந்துள்ளது
தமிழக அரசால் வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இதில் பல்வேறு நடுத்தர மக்கள் நடைபாதை வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் கூலித் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இதனால் மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலை காணப்படுகிறது
ஏழை எளிய மக்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள் உணவுகளை வழங்கி வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்
அரசாங்கம் ஒரு குடும்பத்திற்கு 1000 ரூபாய் என்று அறிவித்து இருக்கிறார்கள் ஆனால் அந்த பணத்தை வைத்து அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது அரசாங்கம் பல நல்ல திட்டங்களை செய்தாலும் மக்களுக்கு அது பற்றாக்குறையாக தான் இருக்கிறது
ஆனால் நமது ஊரில் நமது பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது அவர்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாத சூழ்நிலை அமைந்து உள்ளது அவர்கள் தினக்கூலிக்கு போனால்தான் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும் ஆனால் இந்த சூழ்நிலையில் அவர்கள் சாப்பிடுவதற்கு கூட ஒரு சில குடும்பங்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறது
அன்பார்ந்த சகோதரர்களே இந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்
*அன்பார்ந்த பெரியோர்களே சகோதரர்களே வீட்டு உரிமையாளர்களே நீங்கள் பல வீடுகளை வாடகைக்கு கொடுத்து இருப்பீர்கள் ஆனால் இந்த சிரமத்தில் நீங்களும் அந்த மக்களோடு பங்குபெற்று நீங்கள் வாடகைக்கு விடும் வீடுகளில் 1ஒரு மாதம் அல்லது 2இரண்டு மாதம் வாடகை தள்ளுபடி செய்தால் இந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு பயனுள்ளதாக இருக்கும்*
நாகூர் பகுதியை சேர்ந்த ஒரு நபர் இரண்டு மாத வீட்டு வாடகையை தள்ளுபடி செய்தார்
கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களை விட அதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்….
இதன் பாதிப்பை உணர்ந்த நாகூரை சேர்ந்த A.T.மெய்தீன் அவர்கள் தனது வாடகை வீட்டில் வசித்துவரும் குடியிருப்பு வாசிகளுக்கு இரண்டு மாத வாடகையை தள்ளுபடி செய்த சம்பவம் அவ்வூர் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கொரோனா என்ற வைரஸ் பல நல்ல உள்ளங்களை இந்த உலகிற்கு காட்டி உள்ளதாக குடியிருப்பு வாசிகள் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதேபோல் தங்களது பகுதிகளில் வீடு வாடைக்கு விடும் நபர்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் ஏழை எளிய மக்களுக்கு நீங்கள் இந்த உதவி செய்தால் அல்லாஹ் உங்களை இந்த உலகத்திலும் மறுமையிலும் இதற்கான கூலியை அல்லாஹ் வழங்குவான்
இந்த நேரத்தில் அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான் என்ற பார்வையோடு இந்த நல்ல செயல்களை முன்வந்து செய்தால் சமூகத்திற்கு நன்றாக அமைந்து விடும் என்று என்னுடைய கருத்து
பதிவு :
*கோவை ஆஷிக் அஹமத்*