கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும்- சந்திரசேகர ராவ்.
தெலங்கானாவில் மக்கள் அரசுடன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் போலீசாருக்கு துப்பாக்கி சூடு நடத்தும் அதிகாரம்-முதல்வர் சந்திரசேகர ராவ்.*
_தெலங்கானாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இல்லாவிட்டால் போலீசாருக்கு துப்பாக்கி சூடு நடத்தும் அதிகாரம் வழங்கப்படும். இல்லை என்றால் ராணுவம் அழைக்கப்படும். அதுபோன்ற நிலையை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்._