சென்னை பட்டாளம் மார்க்கெட்!
சென்னை பட்டாளம் மார்க்கெட் மக்கள் அதிக அளவில் கூடியதால், சாலை ஓரங்களில் காய்கறி, பழ வியாபாரம் செய்த கடைகளை அப்புறப்படுத்தியும், வியாபாரம் செய்தவர்களை தடியால் அடித்து கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். அங்குள்ள மீன் மார்க்கெட்க்குள் சென்று மீன் வியாபாரத்தை நிறுத்த சொல்லி போலீசார் வலியுறுத்தினர். அங்கு மீன் வாங்க வந்தவர்களையும் துரத்தி அனுப்பினர். பொதுமக்கள் அச்சம் ஏற்பட்டு பலர் காய்கறி வாங்காமல் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
கொரோனா வைரஸ் பரவதை கொஞ்சம் கூட பயப்படாமல் வீதியில் உலா வருவதும் ஆங்காங்கே கும்பல் கும்பலாக வெளியே அரட்டை தனம் செய்வதும் புளியந்தோப்பு போலீசார் அடிக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும். பிரதான சாலையை விட தெருக்களில் தான் வீட்டினுல் இருக்காமல் வெளியில் நிற்பவர்களை பூஜைகள் போட்டால் தான் இவர்கள் திருந்துவார்கள். புளியந்தோப்பு போலீசாரின் கையில் தான் உள்ளது இந்த நடவடிக்கை.