ஈ.சி.ஆரில் இரு வேறு இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில் இருவர் கைது இரு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவரே என சிசிடிவில் தெரிந்தது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் மருத்துவர் வீட்டில் கடந்த மாதம் இரவு வீட்டின் பூட்டை உடைத்த் மரம நபர்கள் வீட்டினுள்ளே இருந்த பொருட்களை திருடிச் சென்றனர். அங்கே இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் அடுத்துள்ள பனையூரில் இதே போன்று ஜெஸ்ஸிகா பிகோல்டு என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ஐ
போன், வைர மோதிரம், வெள்ளி கம்பல், வெள்ளி மோதிரம், அமெரிக்க டாலர் 70000, அழகு சாதன பொருட்கள் சுமார் 5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது. இங்கு கிடைத்த சிசிடிவி காட்சியில் பதிவான உருவமும், நீலாங்கரையில் பதிவான உருவமும் ஒரே மாதிரி இருந்தது. ஆட்டோவில் ஏறி செல்லும் சிசிடிவியை வைத்து அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு விடுதியில் சென்றது தெரியவந்தது. அங்கு சென்று பார்த்த போது அங்கிருந்து திருநெல்வேலி சென்றதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று உலகநாதன்(19), நல்லசிவம்(24) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.