சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா விழிப்புணர்வு’
ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கல்லூரியின் முகப்பு வாயிலில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வருமுன் தடுப்பதையும் வந்த பின்னர் மேற்கொள்ளவேண்டிய மருத்துவ சுகாதார குறிப்புகள் பேனர்களில் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளன. பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் வரும் 22.03.2020 ஞாயிறு காலை 7மணி தொடங்கி இரவு 9 மணிவரை மொத்தம் பதினான்கு மணிநேரம் அவரவர் வீடுகளில் சுய ஊரடங்கை கடைபிடிக்கவேண்டும் என நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனாவிற்கு எதிரான தீவிர தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் மாண்புமிகு பிரதமர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள சுய ஊரடங்கு உத்தரவு முழுமையாக மக்களால் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்ற நன்நோக்கில் கல்லூரி நிர்வாகத்தினரால் பேனர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் முனைவர் மா. கு. இரகுநாதன் தெரிவித்தார்.