கொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர் .

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் கலிபோர்னியாவை சார்ந்த DoWhistle நிறுவனம், www.DoWhistle.com என்ற வலைத்தளத்தையும் (Web Site),“DoWhistle” ( https://whi.stle.us/android ) செயலியை (APP) ஒரே நாளில் வடிவமைத்து கூகுள் நிறுவனத்தை அமேரிக்கா வாழ் இந்தியர் ஒருவன் வென்று சாதனை நிகழ்த்தி உள்ளார்.

இது தொடர்பாக DoWhistle வலைத்தளம்( Web Site) மற்றும் செயலியை வடிவமைத்த அமேரிக்கா வாழ் இந்தியரான, “ராஜா அப்பாச்சி” (RAJA APPACHI) DoWhistle CEO and FOUNDER பேசுகையில் , “கொரோனா வைரஸ்” (Covid-19) தொற்று பாதிப்பை கண்டறிவதற்கான பரிசோதனை மையங்கள் குறித்த தகவலை உலகம் முழுவதும் பரிசோதனை மையங்கள் தங்கள் இடத்தை பகிர்ந்து கொள்வதற்காக www.DoWhistle.com என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக DoWhistle என்ற செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இச்செயலி வாயிலாக பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு அருகாமையில் உள்ள கொரோனா சோதனை மையங்களை கண்டறியலாம் மற்றும் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக தங்கள் அருகிலுள்ள மையங்களை தொடர்பு கொண்டு மருத்துவ சேவைகள் விரைவாக கிடைக்க வழி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இந்த வலைத்தளம் மற்றும் செயலியை வடிவமைத்ததின் பின்னணி பற்றிய தகவலை பகிர்ந்து கொண்ட ராஜா அப்பாச்சி (RAJA APPACHI), அமேரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)அவர்களை கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய விசேட வலைத்தளம் ஒன்றை அமேரிக்கா அரசிற்காக உடனடியாக வடிவமைத்து தர இயலுமா ? என கூகுள் நிறுவனத்திடம் கேட்டு கொண்டிருக்கிறார். இதற்கு கூகுள் நிறுவனம் இதற்கு போதுமான கால அவகாசம் வேண்டும். என்று கேட்டதும். ஆனால் எங்களுடைய நிறுவனம் இந்த வலைத்தளம் மற்றும் செயலியை ஒரே நாளில் வடிவமைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறோம் . கூகுள் செய்ய இயலாத காரியத்தை செய்து மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த செயலியை இலவசமாக அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

மேலும் DoWhistle நிறுவனத்தினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற எப்படி முடிந்தது? என்பதை மேலும் விவரிக்கிறார்

கூகுள் போன்ற பயன்பாட்டில் உள்ள தளங்கள் நிலையான வலைத்தளங்களில் உள்ளடக்கத்தை சார்ந்தது. எனவே நமது தேடலின் போது கிடைக்கும் தகவல்கள் தற்போதைய நிலவரப்படி கிடைப்பது கடினம்.

விசில் தளமானது பொதுமக்கள், அரசாங்கம், மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து தனக்கு என்ன வேண்டும் அல்லது தன்னிடம் என்ன உள்ளது என்ற விவரங்களை தமது தற்போதைய இருப்பிடத்துடன் நேரடியாக பதிவு செய்வதால் தேடலின் போது நமக்கு கிடைக்கும் தகவல்கள் தற்போதைய, துல்லியமான , உண்மையான விவரங்கள் கிடைக்க வழிசெய்கிறது .

உதாரணமாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்து நடத்துனர் தற்போது 5 இருக்கைகள் காலியாக உள்ள விவரத்தை விசில் செயலி மூலம் அறிவிக்கலாம். பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அனைவரும் டூ விசில் செயலி மூலம் பேருந்தில் காலியாக இருக்கும் இருக்கைகளை அறிந்து கொள்வதோடு நடத்துனரை தொடர்பு கொண்டு தங்களது இருக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பைக் மெக்கானிக், பெயிண்டர், பிளம்பர், எலெக்ட்ரீசியன், பஞ்சர் சர்வீஸ் என எந்த தொழில் சார்ந்தவர்களும் DoWhistle app மூலம் வலம்வந்து தங்களுக்கு அருகாமையில் உள்ள தங்களுக்கு தேவைப்படுகின்ற நபர்களுக்கு சேவையை நிறைவேற்றக் கூடும்

ஸ்பா, சலூன், மசாஜ், மளிகை பொருள் கடைகள் போன்ற தொழில் செய்பவர்கள் தங்களது தொழில் மந்தமாக நடக்கும் நேரத்தில் DoWhistle மூலம் உடனடி சலுகைகளை அறிவிக்கலாம்.

இதை அருகில் உள்ள வாடிக்கையாளர்கள் DoWhistle செயலி மூலம் அறிந்து கொண்டு சலுகைகளை பெற்று பயன்பெறலாம். இதன்மூலம் வழக்கமாகப் பயன்படுத்தப்படும். குறைந்த செயல்திறன் கூப்பன் முறையை அகற்றி DoWhistle செயலி மூலம் தொழில் நிறுவனங்களில் வருமானத்தை கணிசமாக உயர்த்தலாம்.

இனி உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள். எங்கு எல்லாம் தேவையும் சேவையும் இணைய வேண்டுமென்று நினைக்கிறீர்களோ ? அங்கெல்லாம் விசிலடிக்க பழகிக்கொள்ளுங்கள் .எங்களுடைய தொலைநோக்கு அறிக்கையானது “விசில போடு ! பிறகு தேடு !

DoWhistle தளத்தின் அடிப்படைத் தத்துவமான சேவை (கொரோனா வைரஸ் பரிசோதனை மையம்) தேவை (பொதுமக்கள்) ஐ அருகில் இருக்கும் போது தானாகவே இணைக்கும் திறன் கொண்டது. அதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூகுள் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டும் கூகுள் செய்யத் தயங்கிய பணியை எங்களால் ஒரே நாளில் செய்ய முடிந்தது.

எந்த ஒரு தொழில் நிறுவனமும் தங்களுடைய தயாரிப்பை டூத் பிரஸ் போன்று தினமும் ஒரு முறையாவது பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்துவது யாவரும் அறிந்த ஒன்றே.

DoWhistle வலைத்தளத்தை மக்கள் தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தி பயன்பெற முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

எல்லாவித தேவைகளும் , சேவைகளும் அருகில் இருக்கும்போது உடனடியாக இணைக்கும் தலமாகும்.

தனிநபர் மற்றும் நாட்டின் பொருளாதார மேம்படும்.

சிறு குறு நடைபாதை வியாபாரிகள் முதல் ரிலையன்ஸ் மற்றும் டாடா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பொருட்கள் விற்க வாங்க மற்றும் விளம்பரப்படுத்த தேவையான அனைத்து வசதிகளும் இதில் அடங்கும்.

அனைத்து தரப்பினருக்கும் முற்றிலும் இலவசம்.

எங்களின் இந்த விசில் தளத்தை பொது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உறுதுணையாக இருப்பவர்களின் முதன்மையானவர்கள்.

1. ரங்கா ஜெயராமன்
(Stanford business graduate school associate DEAN/CDO – USA)

2. ஜெய் விஜயன்.
(Ex,Tesla motors CIO – USA)

3.Prof.கிருஷ்ணன்.
(MIT Doctorate,Harvard-affiliated faculty – USA)

www.DoWhistle.com https://whi.stle.us/ios https://whi.stle.us/android support@dowhistle.com
+91 9629110994

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *