குட்கா பறிமுதல்:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சோதனைச் சாவடி அருகில் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த TN60 P 5555 பதிவு எண் கொண்ட வாகனத்தை சோதனை செய்ததில் அவற்றில் மூடை மூடையாக குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.போலிசார் விசாரணை மேற்கொண்டதில் பெரிய குளத்தில் இயங்கி வரும் பிரபல பல சரக்கு கடையான “செந்தில் ஸ்டோர் ” க்கு விற்பனைக்காக கொண்டு செல்லப் பட்டது தெரிய வந்தது. தமிழக அரசு குட்காவை தடை செய்துள்ள சூழலில் மூடை மூடையாக குட்காவை கடத்தி வந்தது குறித்து பொது மக்களும் போலீசாரும் அதிர்ச்சி கொண்டுள்ளனர். காற்றோடு சோதனைச்சாவடி சோதனை செய்தபோது வாகனத்தையும், வாகனத்தில் கடத்தி வரப்பட்ட குட்காவையும் போக்குவரத்து ஆய்வாளர் வைரமணி போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மர் சிறப்பு சார்பு ஆய்வாளர் குமரேசன் மற்றும் போக்குவரத்து டிரைவர் கிஸ்வர். ஆகியவர் பறிமுதல் செய்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.