ஒரே நாளில் 100 அலகுகளுடைய ஆக்டிவா 6ஜியை சென்னையில் வழங்குகிறது!
- #அமைதியான புரட்சி: உலகளவில் பாராட்டப்பட்ட ஹோண்டாவின் இஎஸ்பி தொழில்நுட்பம் 110 சிசி ஹெச்இடி பிஎஸ்- VI பிஜிஎம்-எஃப்ஐ மற்றும் 26 காப்புரிமைகள்* கொண்ட ஆக்டிவா 6ஜி மற்றும் 20 காப்புரிமைகள்* கொண்ட டியோ போன்றவற்றின் திறனை மேம்படுத்துகிறது.
- 2 வகைகளில் (ஸ்டேண்டர்டு & டீலக்ஸ்) காணப்படுகின்ற அனைத்து புதிய ஆக்டிவா 6ஜியின் விலை 67,135 ரூபாய் முதல் துவங்குகிறது(எக்ஸ்–ஷோரூம் சென்னை)
- 6 முக்கிய நன்மைகளுடன் ஆக்டிவா 6ஜியை அனுபவித்திடுங்கள் – 10% -ற்கும் அதிகமான மைலேஜ், சத்தமில்லா தொடக்க அமைப்பு, புதிய தொலைநோக்க சுருள் கம்பி அமைப்பு(சஸ்பென்ஷன்), இயந்திரத்தின் தொடக்க/நிறுத்த ஸ்விட்ச், வெளிப்புற எரிபொருள் மூடி மற்றும் மிகப்பெரிய 12-அங்குல முன்புற சக்கரம்
- 2 வகைகளில் (ஸ்டேண்டர்டு & டீலக்ஸ்) காணப்படுகின்ற அனைத்து புதிய டியோவின் விலை 65,726 ரூபாய் முதல் துவங்குகிறது (எக்ஸ்–ஷோரூம் சென்னை)
- 5 பிரத்யேக இணைப்புகள் (இயந்திரத்தின் கட்-ஆஃப் கொண்ட பக்கவாட்டு நிலைதாங்கியின் குறிகாட்டி, புதிய முன்புற அமைப்பு, சத்தமில்லா தொடக்க அமைப்பு, முழு டிஜிட்டல் மீட்டர் மற்றும் தவறான இயக்கத்தை கண்டறியும் அம்சம்)
- ஹோண்டாவின் பிஎஸ்-VI தொழில்துறையின் முதல் சிறப்பு மிக்க 6-வருட உத்தரவாத தொகுப்புடன் வழங்கப்படுகிறது (3 வருடம் நிலையானது + 3 வருடம் விருப்பத்திற்கேற்ப நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்)
- சில்லறை நிதிக்கு 10,000 ரூபாய் வரை சலுகையும், ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 5,000 ரூபாய் வரை 5% பணத்தை திரும்ப பெறும் சலுகையும் உள்ளது
சென்னை, மார்ச் 6, 2020: பசுமையான எதிர்காலத்தை நோக்கி முன்னேறி #அமைதியான புரட்சியை முன்னிறுத்திய, ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இன்று 2 அனைத்து புதிய பிஎஸ்-VI இணக்கமான மாதிரிகளான- ஆக்டிவா 6ஜி பிஎஸ்- VI மற்றும் டியோ பிஎஸ்-VI–ஐ சென்னையில் அறிமுகப்படுத்தியது. மீண்டும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் ஹோண்டா, அறிமுகம் செய்யும் நாளிலேயே சென்னையில் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு ஆக்டிவா 6ஜி பிஎஸ்–VIயை வழங்கியது!
அனைத்து புதிய ஆக்டிவா 6ஜி பிஎஸ்- VI மற்றும் புதிய டியோ பிஎஸ்- VI குறித்த கூடுதல் விவரங்களைப் பகிர்ந்துகொண்டு, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையின் மூத்த துணைத் தலைவரான திரு. யத்வீந்தர் சிங் குலேரியா, “இருசக்கர வாகனத் துறையில் பிஎஸ்- VI மாற்றத்தின் முன்னணியில், ஹோண்டாவின் பிஎஸ்- VI விற்பனை 4 லட்சம் அலகுகளைத் தாண்டியுள்ளது. தென்னிந்தியா முழுவதிலும் ஹோண்டா நம்பர் 1 இருசக்கர வாகன நிறுவனமாக விளங்குகிறது, மேலும் ஆக்டிவா & டியோ ஆகியவை இந்த பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களின் முதல் விருப்பத்தேர்வுகளாக உள்ளன. தமிழ்நாடு எங்களுக்கு ஒரு முக்கிய சந்தையாக விளங்குவதால், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட பிஎஸ்-VI இணக்கமான ஸ்கூட்டர்களான – ஆக்டிவா 6ஜி & டியோவை இங்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பிஎஸ்VI வரலாற்றில் இரு வாகனமும் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.
#ஹோண்டாவின் அமைதியான புரட்சி
#அமைதியான புரட்சியின் மையக் கருத்தாக ஹோண்டாவின் அனைத்து புதிய பிஎஸ்VI இயந்திரமும் உலகளவில் அனைவராலும் பாராட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட சிறந்த ஆற்றல் (இஎஸ்பி) தொழில்நுட்பத்துடன் இருக்கிறது.
இஎஸ்பி தொழில்நுட்பம் ஹோண்டாவின் காப்புரிமை பெற்ற ஏசிஜி துவக்க இயந்திரத்தை (ஒவ்வொரு முறையும் விரைவான, அமைதியான, வேகமான துவக்கத்திற்கு) திட்டமிடப்பட்ட எரிபொருள் செலுத்தி (ஹெச்இடியுடன்) மற்றும் குறைக்கப்பட்ட உராய்வுகளுடன் (மென்மையான மற்றும் சிறந்த ஆற்றல் வெளியீட்டிற்கு) ஒருங்கிணைக்கிறது.
ஆக்டிவா 6ஜி – இந்தியா 2020 ஆம் ஆண்டை 6 ஆற்றலுடன் கொண்டாடுகிறது!
ஆக்டிவா 6ஜி-யில் இஎஸ்பி தொழில்நுட்பத்தால் இயங்கும் அனைத்து புதிய 110 சிசி ஹெச்இடி பிஜிஎம்-ஃபை இயந்திரமும் கூடுதலாக 10% கூடுதல் மைலேஜ் தருகிறது, மேலும் சத்தமில்லாத துவக்கத்திற்காக ஏசிஜி இயந்திரம் மற்றும் 26 காப்புரிமை பயன்பாடுகள் மற்றும் உலகின் முதல் மேம்பட்ட சிறந்த மெருகூட்டும் தொழில்நுட்பத்தில் (eSTT)வருகிறது
பயணத்திற்கு அதிக வசதியைக் கொடுப்பது புதிய தொலைநோக்கி சுருள் கம்பி அமைப்பு (சஸ்பென்சன்) புதிய தரை தூர தொலைவு (+ 18 மிமீ), புதிய ஒற்றை இயந்திர தொடக்க / நிறுத்த ஸ்விட்ச், புதிய ஒருங்கிணைந்த இரட்டை செயல்பாட்டு சுவிட்ச், புதிய இருக்கை மற்றும் புதிய வெளிப்புற எரிபொருள் மூடி, புதிய மீட்டர் வடிவமைப்பு சூழல் வேகத்துடன் வருகிறது. புதிய செயலிழப்பு ஒளியின் ஆன்-போர்டு கண்டறியும் அம்சம், புதிய டிசி எல்இடி முகப்பு விளக்குகள் (டீலக்ஸ் வகையில்), புதிய பாஸிங் ஸ்விட்ச், அதிகரித்த தரை இடம் (+ 23 மிமீ), பெரிய 12 அங்குல முன் சக்கரம் மற்றும் நீண்ட வீல்பேஸ் (+ 2 மிமீ)
ஆக்டிவா 6ஜி 2 வகைகளில் (ஸ்டாண்டர்ட் & டீலக்ஸ்), 6 வண்ணங்களில் (கிளிட்டர் ப்ளூ மெட்டாலிக் புதிய, பேர்ல் ஸ்பார்டன் ரெட், டாஸ்ல் எல்லோ மெட்டாலிக், பிளாக், பேர்ல் ப்ரீசியஸ் ஒயிட் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக்) ரூபாய் 67,135 (எக்ஸ்-ஷோரூம் சென்னை) விலை துவங்குகிறது.
பிஎஸ்-VI உடன் டியோவை வைத்திருங்கள்
டியோ பிஎஸ்- VI 20 காப்புரிமை தொழில்நுட்பங்களுடன் மற்றும் ஹோண்டாவின் நம்பகமான 110 சிசி பிஜிஎம்-எஃப்ஐ எச்இடி இயந்திரம் மேம்படுத்தப்பட்ட சிறந்த ஆற்றலுடன் (இஎஸ்பி) வருகிறது. ஹோண்டா டியோ புதிய அமைப்பிலான எல்இடி நிலைநிறுத்தப்பட்ட விளக்கு, நவீன பின்புற விளக்கு வடிவமைப்பு, அழகான பிளவு அமைப்பிலான கிராப் ரெயில், புதிய ‘டியோ’ லோகோ மற்றும் வண்ணமயமான கிராபிக்ஸ் புதியது.
டியோவின் ஒரு இயந்திரத்தின் தொடக்க/ நிறுத்த ஸ்விட்ச் புதிய, புதிய ஒருங்கிணைந்த இரட்டை செயல்பாட்டு சுவிட்ச், புதிய வெளிப்புற எரிபொருள் மூடி, சிறந்த நிலைத்தன்மைக்கு அதிகரிக்கப்பட்ட சக்கர அமைப்பு(+ 22 மிமீ), புதிய தொலைநோக்க சுருள் கம்பி அமைப்பு (சஸ்பென்சன்) மற்றும் புதிய 12 அங்குல முன்புற சக்கரத்துடன் மற்றும் நம்பிக்கையுடன் பயணம் செய்யலாம், புதிய முன்புற அமைப்பு, புதிய பாசிங்க் சுவிட்ச் மற்றும் புதிய டிசி எல்இடி முகப்பு விளக்கு (டீலக்ஸ் வகைகளில்). முழுவதும் டிஜிட்டல் மீட்டர் புதிய பகிர்வுகள் 3 புதிய நிகழ்நேரத் தகவல்தொடர்புகள் மற்றும் இயந்திர கட்-ஆஃப் புதியதுடன் (விருப்பப் பகுதி) பக்கவாட்டு நிலைதாங்கியின் குறிக்காட்டி, பக்கவாட்டு நிலைத்தாங்கியை மடக்கவில்லை எனில் இயந்திரம் இயங்கா வண்ணம் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய பிஎஸ்- VI டியோ 2 வகைகளில் கிடைக்கிறது – ஸ்டாண்டர்ட் & டீலக்ஸ், 4 வண்ணங்கள் (மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், கேண்டி ஜாஸி ப்ளூ, ஸ்போர்ட்ஸ் ரெட் & வைப்ரண்ட் ஆரஞ்சு) ரூபாய் 65,726 (எக்ஸ்-ஷோரூம் சென்னை) விலையானது துவங்குகிறது.