தமிழ்நாடு காவல்துறை செங்கல்பட்டு மாவட்டம் மதுவிலக்கு அமல் பிரிவு செங்கல்பட்டு கள்ள சாராயம் மற்றும் போலி மதுபானம் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்,
செங்கல்பட்டு கள்ள சாராயம் மற்றும் போலி மதுபானம் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம். ஆய்வாளர் A. ஜோசப் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது,உடன் எழுத்தாளர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,
சட்டவிரோதமான மதுபானங்களை ஒழிக்க இணைந்து போராடுவோம் இது தொடர்பான தகவல்களை 10581 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கவும் தகவல் தெரிவிப்போரின் பெயர்கள் எக்காரணம் கொண்டும் வெளியிட மாட்டோம் ரகசியம் காக்கப்படும்,
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை காஞ்சிபுரம் மாவட்டம்,
கள்ளச்சாராயம் மற்றும் மது குடிப்பதனால் ஏற்படும் தீமைகள்
1,தூக்கமின்மை. வாந்தி .வயிற்றுப்புண் .இரத்த அழுத்தம் .இருதய வீக்கம் ஏற்படுகிறது.
2,மலட்டுத் தன்மை ஏற்படுகிறது
3, கண்பார்வை மங்குதல். கை. கால். வலிப்பு போன்றவை ஏற்படுகிறது
4, மூளையையும். நரம்பு மண்டலத்தையும் தாக்கி சோர்வடைய செய்கிறது,
5, கல்லீரல் பாதிக்கப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்படுகிறது.
6, மனிதனை நோயாளி ஆக்கி அவனை தற்கொலைக்கு தூண்டுகிறது.
7, உறவினர் சுற்றத்தாரின் வெறுப்புகளுக்கு ஆளாக நேரிடும்.
8, குடும்பத்திற்கு நிரந்தர அவப்பெயரை ஏற்படுத்தி பிள்ளைகளின் முன்னேற்றத்தை பாதிக்கும்.
இது போன்ற பல தீமைகளிலிருந்து விடுபட சூளுரைப்போம் வீட்டிற்கும் நாட்டுக்கும் வளமை சேர்ப்போம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் காஞ்சிபுரம் மாவட்டம்,