தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியாற்றிவருபவர்களின் வாரிசுகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 10 பேருக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் குழந்தைகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களை ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.2018-2019 கல்வி ஆண்டில் 12ம் வகுப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வருபவர்களின் குழந்தைகளில் உதவி ஆய்வாளர்கள் வைகுண்டம் மகள் செல்வராணி, கற்பகவள்ளி மகள் பவ்யா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திருப்பாற்கடல்நாதன் மகள் காருண்யா, அந்தோணி அருள்ராஜ் மகள் அந்தோணி ரெடீம்ஸி, லெட்சுமணன் மகள் முத்து சுபத்ரா, தலைமை காவலர்கள் வெள்ளேரி புரூசோ சேவியர் மகன் அவிநாஸ், திருமலை ராஜ் மகள் திவ்யா, அருணாச்சலம் மகள் செந்தமிழ் செல்வி, நாராயணன் மகள் சுபா மற்றும் ராஜசுப்பையா மகன் சங்கர், ஆகியோர் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 10 இடத்தில் தேர்ச்சி பெற்றுள்னர்

அதே போன்று 10ம் வகுப்பில் மாவட்ட காவல்துறை அலுவலக உதவியாளர் கிருஷ்ணம்மாள் மகள் லதா சுப்ரியா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாரியப்பன் மகள் மதுமிதா, சரவணன் மகள் காயத்ரி, சந்தனராஸ் மகள் புஷ்கலா, தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியன் மகள் ஆர்த்தி, ராமச்சந்திரன் மகன் ஸ்ரீராம், முத்துக்கிருஷ்ணன் மகள் அங்காள பரமேஸ்வரி, லூர்த்தவாஸ் மகன் நிபிராஜ், காமாட்சி மகன் லோக சக்தி, முஹைதீன் அலி மகன் சரோத் ஜஹான் ஆகியோர் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 10 இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களில் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவருக்கு ரூபாய் 7500/-ம், இரண்டாம் மதிப்பெண் பெற்றவருக்கு ரூபாய் 5500/- மூன்றாவது மதிப்பெண் பெற்றவருக்கு ரூபாய் 3500/-ம் மற்றவர்களுக்கு ரூபாய் 2500/-மும்,10ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண்பெற்றருக்கு ரூபாய் 6500/-ம், இரண்டாம் மதிப்பெண் பெற்றவருக்கு ரூபாய் 4500/-, மூன்றாவது மதிப்பெண் பெற்றவருக்கு ரூபாய் 2500/- மற்றவர்களுக்கு ரூபாய் 2000/-த்திற்கான வங்கி வரைவோலைகளை வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் வழங்கி பாராட்டினார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *