*ஏழைகளின் கல்வி கண் திறக்கும் கிழக்கு கடற்கரை சாலை பனையூர் எரம்மா அம்மாள் அறக்கட்டளை.*


🍓🤝👍🏿🍓🤝👍🏿🍓🤝🍓🤝👍🏿
*சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் எரம்மா அம்மாள் அறக்கட்டளைக்கு வெட்டுவாங்கேனியைச் சேர்ந்த மாணவர் வந்தார். அவர் கிழக்கு கடற்கரை சாலை அமீட் பல்கலைக்கழகத்தில் MBS முதலாமாண்டு படிக்கும் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த குமார் என்கிற மாணவர். இவர் அமீட் பல்கலைக்கழகத்தில் தற்போது MBA முதலாமாண்டு படித்து வருகிறார்.*

*இவருக்கு பீஸ்கட்டி படிக்க வசதியில்லை இரண்டு வருடத்திற்கு சேர்த்து மொத்தம் ஆறு லட்சம் பீஸ் கட்ட வேண்டும். ஆனால் பீஸ் கட்டுவதற்கு இவருக்கு வசதியில்லை… இந்நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் பனையூர் எரம்மா அம்மாள் அறக்கட்டளை தலைவர் மற்றும் வெளிச்சம் தொலைக்காட்சி இயக்குனர் அண்ணார் பனையூர் மு.பாபு அவர்களை சந்தித்து உதவி கேட்கிறார்.*

*புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அண்ணார் எரம்மாள் அம்மாள் அறக்கட்டளை தலைவர் அவர்களின் இளைய வாரிசு… இளைய தளபதி பா.விஜய் அவர்களிடம் ஒப்படைக்கிறார். அவர் எரம்மா அம்மாள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சமூக ஆர்வலர் சு.இராமச்சந்திரன் ஆகிய என்னிடம் அனுப்பி வைத்தார்.*

*நானும் எரம்மா அம்மாள் அறக்கட்டளை தலைவர் அண்ணார் பனையூர் மு.பாபு அவர்களிடம் இந்த விவகாரத்தை எடுத்து கூறினேன்… அவர் கல்வி என்று யார் வந்தாலும் என்னிடம் கேட்க வேண்டாம் உடனே அவர்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை உடனே செய் என்று ஆனையிட்டார்.*

*நான் முதலில் கடந்த அய்ந்து நாட்கலுக்கு முன்பு அந்த மாணவனை கல்லூரிக்கு அழைத்து சென்று SC மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பம்… இதுவரை ஏன் இவருக்கு வழங்கவில்லை? என்று கேட்ட போது கல்லூரி நிர்வாகம் கடந்த அய்ந்து வருடமாக SC/ST மாணவர்களுக்கு இந்த சலுகை அய்ந்து வருடமாக கிடைக்கவில்லை என்று கூறினார்.*

*ஏன் என்று கேட்ட போது அரசு வழங்கவில்லை நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறினார்… இது சம்பந்தமாக பிறகு பார்த்துக் கொள்ளலாம்…. முதலில் அந்த மாணவருக்கு உதவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் பாலவாக்கம் கரூர் வைஸ்யா பேங்க் சென்று வங்கி மேளாலரிடம் கல்விக் கடன் கேட்டேன். அவர் கண் துடைப்பிற்காக ஏபரல் மாதம் தான் இது சம்பந்தமாக பேச முடியும் தற்போது மார்ச் மாதம் கணக்கு முடிக்கிறோம் இப்போது இது சம்பந்தமாக எதுவும் சொல்ல முடியாது என்று வங்கி மேலாளர் நழுவினார்.*

*இந்நிலையில் இன்று 12.03.2020 அந்த மாணவனை அழைத்துக்கொண்டு தாட்கோ மேலாண்மை இயக்குனர் திருமிகு.விஜயராணி.IAS., அவர்களை சந்தித்தேன்.*

*ஏப்ரல் எக்சாம் பீஸ் கட்டினால் தான் தேர்வு எழுத முடியும் இல்லை என்றால் தேர்வு எழுத முடியாது என்று கல்லூரி நிர்வாகம் என்னிடமே கூறினார்கள் என்பதை மேடத்திடம் விளக்கமாக எடுத்துரைத்தேன். அவரும் இதனை பொறுமையாக கேட்டுக்கொண்டு அவர் நாங்கள் கொடுத்த மனுவை பெற்றுக்கொண்டு அவர் உடனே போனை எடுத்து செக்சனுக்கு போன் செய்து இந்த விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களை பெற்று உடனே ரெடி பன்னி ஸ்பெசல் கேசாக போட்டு என்னிடம் சொல்லுங்கள். நான் டெல்லிக்கு நானே பேசி 10 நாளில் இந்த மாணவனுக்கு பீஸ் கட்டலாம் என்று உத்தரவிட்டார்.*

*சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இன்று சமர்பிக்கப்படும். மேலும் இந்த ஏழை தலித் மாணவருக்கு விரைவாக அவரின் நிலமையை புரிந்து கொண்டு உதவிட முன்வந்து ஸ்பெசல் கேசாக எடுத்து உதவிய அம்மையார் திருமிகு.விஜயராணி.IAS அவர்களுக்கு பனயூர் எரம்மா அம்மாள் அறக்கட்டளை மற்றும் தமிழக பட்டியலின மக்கள் பெரிதும் என்றும் என்றென்றும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.*

*அம்மா வாழ்த்துகள்… வாழ்க பல்லாண்டு…*

*எப்போதும் ஏழைகளின் கல்வி கண் திறக்கும் பனயூர் எரம்மா அம்மாள் அறக்கட்டளை. ஏழைகலுக்காகவே…. தொடர்ந்து செயல்படும். தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.*
🍅🤝🤝🍅🤝🤝🍅🤝🤝🍅🤝
*என்றும் சமூகப்பணியில்*

*சமூக ஆர்வலர்*
*சு.இராமச்சந்திரன்*
*ஒருங்கிணைப்பாளர் – எரம்மா அம்மாள் அறக்கட்டளை.* பனையூர்.
சென்னை. 119.*
*செல். 9677273082*
🙏🏾👏🙏🏾👏🙏🏾👏🙏🏾👏🙏🏾👏🙏🏾

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *