பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பார்வைக்கு
*மண்டலம் -9 வார்டு : 123, பகுதி : 25,*
*ஆழ்வார்ப்பேட்டை, டி.டி.கே சாலை, டிமாண்டி காலனி* அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து சாலைமுழுவதும் குப்பைகழிவுகளை கொட்டி செல்வதனால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது
அதை ஒட்டியே நடைப்பயிற்சி செய்யும் பூங்கா மற்றும் தனியார் பள்ளி சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகிறார்கள் அவர்கள் அனைவரும் பள்ளி முடிந்தவுடன் இந்த டீமாண்டி சாலை வழியாகதான் செல்லவேண்டும் அந்த இடத்தில் கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா, போன்ற தொற்று நோய்கள் ஏற்ப்பட்டு பல பாதிப்புகள் ஏற்படுவதாக பள்ளிக்கு வந்து செல்லும் பெற்றோர்களும், பொது மக்களும் கூறுகிறார்கள் அது மட்டும் இல்லாமல்
இந்த இடத்தை பயன்படுத்தி
பல அசம்பாவித செயல்களும் இரவுநேரங்களில் நடக்கிறது என்று கூறப்படுகிறது சம்மந்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்த இடத்தை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றி பயன்பாட்டிற்கு எடுத்துவரவேண்டும் என்பது பொதுமக்களின் பணிவான வேண்டுகோள்.