சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
08 / 03 / 2020 அன்று காஞ்சி கலைச் சங்கமம் இயல், இசை, நாடக, நாட்டுப்புறக் கலைக்கூடம் – தமிழ்நாடு சார்பாக விருதுகள் வழங்கும் விழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் மற்றும் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி் முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குமாரராணி மீனாமுத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ப.தி.விஜய்ஸ்ரீ அவர்கள் முன்னிலை வகித்தார். புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. மகளிர் தினத்தையொட்டி திருவள்ளுவர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் ஜீவா விசயராகவன், சென்னை தி சுசான்லி குழுமத்தைச் சார்ந்த பேரா.மரு உஷசா ரவி அகிய இருவருக்கும் சாதனைப் பெண்மணி விருது வழங்கப்பட்டது.அந்நிகழ்வைத் தொடர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் ஆ.மணவழகன், முனைவர் கா. காமராஜ், முனைவர் சு. தாமரைப்பாண்டியன், திருமதி மு. சித்ராதேவி காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மதுரை, முனைவர் சு. காந்தித்துரை, தியாகராசர் கல்லூரி மதுரை, முனைவர் சிவலோகநாதன், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சிதம்பரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் தமிழகம் சார்ந்த கல்லூரி மற்றும் பள்ளியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தமிழ்ப் பணியாற்றுபவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கும் 500க்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன், பாவேந்தர் பாரதிதாசன், எழுத்தாளர் பிரபஞ்சன், ஆடல் மாமணி, இசைக் கலைமணி, சித்திரச் செம்மல், ஆன்மீகச் செம்மல் என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. காஞ்சி கலைச் சங்கமத்தின் தலைவர் செம்மொழி மு. குமார் வரவேற்புரையாற்றினார். அறிவிப்பாளர் ரெயின்போ பண்பலை திரு கோ. மணி, கவிஞர் மோ. காமாட்சிப் பிரியா ஆகியோர் நிகழ்ச்சித் தொகுப்பு செய்தனர். முனைவர் செ. ஜெயஜோதி புஷ்பம் நன்றியுரை வழங்கினார்.