*கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.*
*தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அய்யனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரை 10.02.2020 அன்று புதுக்கோட்டை சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் அருகே பாளையங்கோட்டை சிவந்திபட்டி பகுதியைச் சேர்ந்த அதிசயபாண்டியன்(45) என்பவர்அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் அதிசய பாண்டியனை கைது செய்தனர்.*
*மேற்படி எதிரி அதிசயபாண்டியன் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள புதுக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. விமலா, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.*
*பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் எதிரி அதிசயபாண்டியன் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.*
*அவரது உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. விமலா அவர்கள் எதிரி அதிசயபாண்டியனை இன்று (10.03.2020) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.*