தூத்துக்குடியில் தமிழ்நாடு தவ்ஹித ஜமாத் முற்றுகை போராட்டம்!!!
: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை
எதிர்த்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து
தமிழ்நாடு தவ்ஹீ த் ஜமாஅத் சார்பில் இன்று 15/02/2020 காலை 11.30
மணியளவில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் தூத்துக்குடி மாவட்ட
தலைவர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் செய்யது அலி அவர்கள் கலந்து கொண்டு
பேசியதாவது… குடியுரிமை திருத்த சட்டக்திற்கு எதிராக நாடு முழுவதும்
போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் 50 நாட்களுக்கும்
மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று சென்னையில்
வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைதியான முறையில் போராட்டம்
நடத்திக்கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி
உள்ளனர். பெண்கள், முதியோர் என பலரும் காவல்துறையின் காட்டு
மிராண்டித்தனமான தடியடியில் காயமடைந்துள்ளனர்.
அறவழியில் போராடுபவர்கள் மீது காவல்துறை
நடத்தியுள்ள இத்தாக்குதல் ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் எதிரானது.
மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை உரிமைக்காக
போராடியவர்கள் மீது தடியடி நடத்தி இருப்பது சட்டத்தின் மீது
தொடுக்கப்பட்டுள்ள வன்முறையாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. நாங்கள்
சட்டத்தை மதிக்கிறோம். சட்டத்தின்படி எங்களுடைய போராட்டத்தை
அமைதியான முறையில் நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசாங்கம்
காவல்துறையை ஏவிவிட்டு அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்துவது
கண்டனத்துக்குரியது. தடியடி போன்ற சம்பவங்களின் மூலமாக தமிழக அரசு
இந்த மக்களை அச்சுறுத்த நினைத்தால் மக்கள் போராட்டம் இன்னும் வீரியம்
பெறும்.
அடக்குமுறைக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம். காயமடைந்த
மக்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.
போரட்டத்தில் பங்கு கொண்டோர் மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்ப பெற
வேண்டும். தடியடி சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது துறை
ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு NRC,CAA,NPR, ஆகிய
சட்டங்களை தமிழகத்தில் நடைமுறை படுத்த மாட்டோம் என்று
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடியுரிமை திருத்த
சட்டத்தை வாபஸ் பெறும் வரை மக்கள் போராட்டம் ஓயாது.
இவ்வாறு அந்த
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். தடியடியை கண்டித்தும், தமிழக
அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள்
கோஷங்கள் எழுப்பினர்
மாவட்ட நிர்வாகிகளில் மாவட்ட செயலாளர் அஸாருதீன், துணை
தலைவர் தமீம் அன்சாரி, துணை செயலாளர்கள் சிக்கந்தர், இமாம்
ஃபரீது ஹஸன் சைபுதீன், மருத்துவ அணி செயலாளர் ரஷீத்
காமில், மாணவரணி செயலாளர் அஃப்ரிடி, தொண்டரணி செயலாளர் வஸீம்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியில் மாவட்ட பொருளாளர் நாஸர்
அலி நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் என
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கண்டன
ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தோடு தூத்துக்குடி
கிளை நிர்வாகமும் சேர்ந்து செய்திருந்தது.