இயற்கை கனிம வளங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உரங்களை S.M.A கெமிக்கல்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது..
இயற்கை கனிம வளங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உரங்களை LEAF எனப்படும் பிராண்ட் வகையை முன்னிறுத்தி S.M.A கெமிக்கல்ஸ் நிறுவனம் அறிமுகப் படுத்துவதில் பெருமை அடைவதாகத் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்..இந்த நிகழ்வு விவசாயத்தில் மாபெரும் வளர்ச்சியை கொண்டு வருவதுடன் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்..
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த S.M.A கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அப்துல் ஹக்கீம் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது…இந்தியாவில் உரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மிகக் குறைவாக உள்ளது எனவும் அதிலும் குறிப்பாக இயற்கை கனிம வளங்களை பயன்படுத்தி உரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மிக குறைவு என்றும் , ஆனால் S.M.A கெமிக்கல்ஸ் நிறுவனம் இயற்கை கனிம வளங்களைக் கொண்டு LEAF என்ற பெயரில் உரங்களை தயாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்…வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கிடைக்கக் கூடிய இயற்கையான கனிம வளங்களை தொழிற்புரட்சியின் மூலம் மத்திய அரசின் வழி முறைக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்ட விதங்களில் தயாரிக்கப்பட்ட உரங்களாக மாற்றப்படுவதாக தெரிவித் தார்..
நமது நாட்டின் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் முழுமையான முன்னேற்றத்தை நோக்கி செல்லும் வாய்ப்பாக இதனை காண்பதாகவும் விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகள் பெருமளவு தங்களால் உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.. நீர் ஆதாரமின்றி தகுந்த உரங்கள் இன்றி விவசாயத்தை விட்டு விலகிச் செல்லும் விவசாயிகளை மீண்டும் விவசாயம் நோக்கி அழைத்து வருவதில் தங்கள் நிறுவனம் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்…
தங்களின் WATER SOLUBLE உரங்களை சந்தைப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் தகுதியுள்ள நபர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்குவதிலும் முனைப்பாக உள்ளதாக தெரிவித்தார்..
தற்பொழுது தமிழ்நாட்டிலும் எதிர்வரும் காலங்களில் இந்தியா முழுவதிலும் சந்தைப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த இருப்பதாகவும் விருப்பமுள்ளவர்கள் தங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தங்களின் முகவராக செயல்பட்டு வாழ்வின் வளர்ச்சியை நோக்கி பயணிக்கவும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்..
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது.. நிறுவனத்தின் இயக்குனர் கன்னியா ராஜேஷ்.. துணைத் தலைவர் அமித் ஜெயின்… மற்றும் தலைமை செயல் அதிகாரி பிவி ரமணா ரெட்டி மற்றும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்..
இந்நிகழ்வின்போது இயக்குனர் தைரியராஜ் இயக்கிய விவசாயம் வளர்ப்போம் எனும் ஆவணப்படம் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது..