பணியாளர்களில் தகுதி உள்ளவர்களை நிர்வாக அலுவலர் களாக நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை முறையாகவும் காலதாமதமின்றி தொழிலாளர்களை சென்றடைய அரசு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாராட்டு விழா கூட்டத்திற்கு பின் செய்தியாளரிடம் பேசிய சங்க காப்பாளர் தேவராஜன்…ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் பணியாளர்கள் பனிக்காலத்தின் போது மரணம் ஏற்பட்டால் அவர்களுக்கான குடும்பநல செய்தியை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் என எனவும்..நிர்வாக அலுவலர்களின் தனிப்பட்ட தவறுகளாலும் உறவுகளாலும் தவறு செய்யாத பணியாளர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என அரசை கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் அரசு தங்களுக்கு வழங்கும் முறையான பயன்களை பெற இயலாமல் கீழ்மட்ட அதிகாரிகள் தடை செய்வதால் அரசு இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு திருக்கோயில்கள் தொழிலாளர்கள் யூனியன் சார்பாக கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த பாராட்டு விழாவின்போது மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் ரமேஷ் மற்றும் வில்லிவாக்கம் குகன் மாநில துணை அமைப்பாளர் இருவரும் முன்னிலை வகித்தார்கள்.தேனாம்பேட்டை கோட்ட அமைப்பாளர் திருமதி செந்தமிழ்ச்செல்வி வரவேற்புரை நிகழ்த்தினார்.தஞ்சாவூர் மதுரை சென்னை மாமல்லபுரம் கோவை பெரியபாளையம் என தமிழகம் முழுவதிலுமிருந்து தொழிலாளர் யூனியன் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் இறுதியாக செயற்குழு உறுப்பினர் சைதாப்பேட்டை தணிகைவேல் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இந்த நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில துணைத்தலைவர் தனசேகர் மற்றும் சைதை தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் மேற்கொண்டனர்.