கோவை ஈசா பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
கல்லூரி மாணவ _ மாணவிகள் உற்சாகம்.
கோவை. ஜனவரி.11-
கோவை, பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ளது ஈசா பொறியியல் கல்லூரி.
இக்கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கல்லூரியில் மாணவ மாணவிகள் கிராமிய முறைப்படி பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக கல்லூரி தலைவர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி, கல்லூரிசெயலாளர் டி.இ. சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பாரம்பரிய சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதற்காக கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவியர் வண்ண வண்ண தோரணங்கள் கட்டியும் கோலமிட்டும் கிராமிய மணம் கமழ மண் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
மேலும் பாரம்பரிய உடையான பட்டு சேலை அணிந்து கிராமத்து பெண்களை நினைவு கூறும் வகையில் மாணவியர் கும்மியடித்து நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இதேபோல் மாணவர்கள் மேள தாளங்கள் வாசித்தும் சிலம்பம் சுற்றியும் சாகச நிகழ்ச்சிகள் நடத்தியும் பிற மாணவ மாணவியரை உற்சாகப்படுத்தினர்.
கேரள மாணவ மாணவியர் அதிகளவில் பயிலும் இக்கல்லூரியில் தமிழக பாரம்பரிய பண்டிகையில் கேரள மாணவிகள் கலாச்சார உடையில் பங்கேற்று மகிழ்ந்தது மற்ற மாணவ மாணவியரிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது.
பின்னர் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் முதன்மை செயல் அதிகாரி டி.இ.அஜித், தலைமை நடவடிக்கை அதிகாரி டி.இ.ஆதர்ஷ், கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராபர்ட் கென்னடி, கல்லூரி நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
இதில் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள்,மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.