ஜன.15 – முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குக்கின் பிறந்த நாள்

முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக்கின் பிறந்தநாள் முதல்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.

பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடித்தவர் பென்னி குக். இவரது பிறந்தநாளான ஜனவரி 15-ம் தேதியை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை விவசாயிகள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே இவரது பிறந்த நாள் அரசு விழவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதையொட்டி தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், பென்னி குக்கின் நினைவு மண்டபத்தில் உள்ள முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.