சீனாவில் கோலாகலமாகத் தொடங்கியது லாந்தர் திருவிழா
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பாரம்பரியமிக்க லாந்தர் திருவிழா கோலாகலமாகக் தொடங்கியுள்ளது. தெயாங் என்ற நகரத்தில் தொடங்கியுள்ள இந்த விளக்குத் திருவிழாவில் முப்பரிமாண முறை, ஹாலோகிராம் முறை லேசர் விளக்கொளியில் தெயாங் நகரமே மின்னி வருகிறது.
கடை வீதிகள் மட்டுமின்றி, வீடுகள், கல்விக்கூடங்கள் என காணுமிடங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நேற்று தொடங்கியுள்ள விளக்குத் திருவிழா அடுத்த மாதம் 16ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தத் திருவிழாவைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.