மாணவர்கள் தற்கொலை : தமிழகத்திற்கு 2வது

கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018 ம் ஆண்டில் 10,000 க்கும் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டில் சராசரியாக 24 மணி நேரத்தில் 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தேசிய குற்றப்பதிவு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின் படி, 2009 ஜன.,1 முதல், 2018 டிச.,31 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 81,758 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதிகபட்சமாக 2018 ம் ஆண்டு மட்டும் 10,159 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 2018 ல் 1.3 லட்சம் தற்கொலைகள் நடந்துள்ளது.

இவற்றில் 8 சதவீதம் பேர் மாணவர்கள், 8 சதவீதம் பேர் விவசாயிகள், 10 சதவீதம் பேர் வேலையில்லாதவர்கள்.2018 ல் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலோனோர் தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள்.

குடும்ப சூழல் காரணமாக மனஅழுத்தத்திலேயே மாணவர்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மனஅழுத்தம், பயம், மனநல பாதிப்பு பிரச்னைகள், போதைப் பொருட்கள் ஆகியன மாணவர்கள் தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வெளியில் செல்ல வழி இல்லாததால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

2018 ல் மாநில வாரியாக மாணவர்களின் தற்கொலையை பொருத்தவரை மஹாராஷ்டிரா (1448) முதலிடத்திலும், தமிழகம் (953) 2வது இடத்திலும் உள்ளன.

ம.பி.,(862) 3வது இடத்திலும், கர்நாடகா (755) 4வது இடத்திலும், மேற்குவங்கம் (609) 5வது இடத்திலும் உள்ளன.

2014 முதல் 2018 வரை இந்த 5 மாநிலங்களுடன் சத்தீஸ்கரும் மாணவர்கள் தற்கொலை அதிகம் உள்ள மாநிலங்களில் இணைந்துள்ளது.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *