மாணவனின் கழிவை சக மாணவனை அகற்றச் செய்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை.

நாமக்கல் நகராட்சிப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவனைக் கொண்டு சக மாணவனின் கழிவை அகற்றச் செய்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஆசிரியை விஜயலட்சுமி 2-ஆம் வகுப்பு மாணவனான ஒருவரை வகுப்பறையில் சக மாணவனின் கழிவை அகற்றச்செய்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தனது தந்தையிடம் கூறியதையடுத்து அவர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆசிரியை விஜயலட்சுமி மீது போலீசார் எஸ்.சி. – எஸ்.டி. பிரிவில் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

இந்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *