தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிவாலயங்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிவாலயங்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

*திருச்சி* மாவட்டம் லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நடராஜ பெருமான் அனந்த தரிசனமும் அதனைத் தொடர்ந்து திருவீதி உலா மற்றும் திருநடனக்காட்சியும் விமரிசையாக நடைபெற்றது.

*கன்னியாகுமரி* மாவட்டம் திக்குறிச்சி மஹாதேவர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு மஹாதேவர் நந்தி வாகனத்தில் வேட்டைக்கு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

*நீலகிரி* மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் தோடர் இன பழங்குடியினர், ஆருத்ரா தரிசன தேர் பவனி விழாவையொட்டி, பாரம்பரிய உடையணிந்து ஆடிப்பாடி கொண்டாடினர்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *