பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் Ex Mla கே.குப்பன் வழங்கினார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை திருவொற்றியூர் 7வது வட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு அடங்கிய ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் வழங்கினார்.
பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பரிசு தொகுப்பை பெற்று செல்கின்றனர்.
இன்று 9ம் தேதி துவங்கி வரும் 12ம் தேதிக்குள் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12ம் தேதி வரை பரிசுத் தொகுப்பு கிடைக்கப்பெறாதவர்களுக்கு 13ம் தேதியும் வழங்கப்பட உள்ளது.