கலாச்சாரம் பண்பாடு உள்ளிட்டவைகளை பிரதிபலித்து
எதிர்மறை எண்ணங்களை அகற்றி இளைய தலைமுறையை
நல்வழிபடுத்த 50 ஆண்டு காலத்திற்கு இசையை அனைவருக்கும் கொண்டு சேர்க்க தஅ எதிர்கால இசை
மியூசியத்தை அமைக்க உள்ளதாக
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பேட்டி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஐயர் கண்டிகை கிராமத்தில் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அமைத்துள்ள பிரம்மாண்ட இசை கூடமான கனவுயிர் களம் ,அசைவோவிய தளம் ,மெய்நிகர் கூடம் என்ற தனது ஒய் எம் ஸ்டுடியோவில் தனது 53-வது பிறந்த நாளை பல்வேறு இசைக் கலைஞர்களுடன் இசை மாணவர்களுடனும் உற்சாகமாக வித்தியாசமான முறையில் கொண்டாடினார். அவருக்கு இசைக்கலைஞர்கள் வெளிநாட்டு இசை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சால்வை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு அவரும் இசைக்கலைஞர்களை சால்வையணிவித்து பாராட்டினார் இந்நிகழ்ச்சியில் த அ என்ற புதிய இசை திட்டத்தை அறிமுகப்படுத்தினார் அப்போது பேசிய அவர்
இசை திட்டம் வெளிவர உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்
த அ என்ற எதிர்காலக் இசை திட்டம்
mit உள்ளிட்ட பல உலக அளவிலான நிறுவனத்துடன்
இணைந்து
தமிழ்நாடு கலாச்சாரம் பண்பாடு உள்ளிட்டவைகளை
எதிர்மறை எண்ணங்களை அகற்றி
நல்வழிபடுத்த
இதனை
அனைவரும் பங்கேற்க உள்ளனர்
வெளிநாட்டு கலைஞர்களும் இதில் பங்கேற்க உள்ளதாகவும் அனைவரும் இதற்கு ஆதரவு தந்து இந்த இசை இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டுமென இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் வேண்டுகோள் விடுத்தார்.
இளைய தலைமுறையினர் அனைத்தையும் இன்று இணையதளத்தில் யூடியூபில் பார்த்து விடுகின்றனர் எனவே உலகத்தில் உள்ள அனைத்து எதிர்மறை எண்ணங்களில் இருந்து இளைய தலைமுறை மீண்டு விஞ்ஞானிகள் ஆகவும் இசையமைப்பாளர்கள் ஆகவும் தலைசிறந்த மனிதர்களாகவும் மாற்ற இந்த முயற்சி பெரிதும் உதவும் இது ஒரு முதல் விதை அனைத்து தமிழ் கலாச்சாரமும் அடங்கிய சென்னை ஒரு பொருத்தமான இடமாக இந்த இசை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த புதிய இசை மியூசியத்தில் ஒரு 50 ஆண்டுகால பதிவினை கொண்டுவர வேண்டுமென்பதே இதன் முயற்சி என்றும் த அ என்பதற்கு அர்த்தம் தகதிமிதா , தாரா என்றால் ஸ்டார்ஸ் தாய் தந்தை தமிழ் தாளம் என்பதை உணர்த்தும் விதமாக இந்த த அ இசை எதிர்காலத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது பழமையை விரும்புகிறோம் இதை அடுத்த தலைமுறை உணரும் விதமாக கொண்டு செல்வதே இதன் திட்டம் இணையதளத்தில் இந்த இசை திட்டம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது என இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பாடல்கள் கேட்கும்படியாக தற்போது வெளி வரவில்லையே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய செய்தியாளர்களிடம் எல்லா பாடல்களும் அவ்வாறு இல்லை சினிமா பார்ப்பவர்களை எழுந்து சென்று விடாத அளவிற்கு இசைப் பாடல்களில் ஆடல் பாடல்களுக்கு ஏற்ப அமைந்துவிடுகிறது எல்லா பாடல்களும் அவ்வாறு இல்லை என்று தெரிவித்தார் ஏஆர் .ரகுமான் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தோட்டாதரணி, பரத் பாலா ஜெயராமன் அமெரிக்காவைச் சேர்ந்த இசை அமைப்பாளர் டாட் மேக்ஓவர் ,
சீன வயலின் கலைஞர் ஜூலியா மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.
பேட்டி திரு ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பாளர்